தீபாவளி
தீபாவளி
ஓசையின்றி உறங்கும் அதிகாலை வேளை
ஓசையுடன் ஒருவெடி சத்தம் வந்திட
பூச்சட்டியும் மத்தாப்பும் ஒளியூட்டிட
விண்ணிலும் வர்ணசாலங்கள் களையூட்டிட
அன்னையவள் கைசூட்டில் எண்ணைதனை தலையேந்த
சுடுநீருடன் சிகைக்காயும் கலந்து குளிக்கையில்
அறுசுவை பண்டங்கள் அழைப்பு மணி அடிக்க
புத்தாடையும் தான் அணிந்து
புன்னகை முகம் காட்டி உறவுடன்
புத்துணவு தனை சுவைத்ததிட
வந்ததம்மா தீபத்தின் ஒளிகொண்டு
தீபாவளி என்று கொண்டாடிடவே