தோப்புக் கரணம் போடுங்கள்

தப்பாமல் நாளும் தலைதன்னில் குட்டியே
தோப்புக் கரணம் இடுவேன் கணேசனே
தப்பினை நீபொறுப் பாய்

~~~கல்பனா பாரதி ~~~
இன்று சங்கட ஹர சதுர்த்தி
கணபதி சிறப்புத் துதி
கவிதை இன்னிசை சிந்தியல் வெண்பா எனும் யாப்பு வகையைச் சாரும் .

கருத்து சொடுக்கு போடுகிறீர்களோ இல்லையோ
தினம் தோப்புக் கரணம் போடுங்கள் 3,5,11,21,51,108
அவரவர் உடல் வாகைப் பொறுத்தது .
ஔவையாரின் பாலும் தெளிதேனும் என்ற துதியையும்
நினைவில் வையுங்கள்
சங்கத் தமிழ் மூன்றும் தா என்று முடியும் பாடல் .
கடைசிவரியை இப்படி மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்
சந்திப் பிழை பொருள் பிழை இல்லாத
புதுக் கவிதை தா

எழுதியவர் : கல்பனா பாரதி (30-Oct-15, 7:36 pm)
பார்வை : 58

மேலே