உரைநடைக்கவிதை
தகுதியான இடத்தில்
உரசுகின்றபோதுதான்
உள்ளிருக்கும் நெருப்பை
உமிழ்கிறது தீக்குச்சி.
சூரியனின் சுடரொளி
படும்போதுதான்
மவுனமாக இருந்த
தாமரை மொட்டு அவிழ்கிறது.
அதுபோல
தகுதியான மனிதர்களைச்
சந்திக்கும்போதுதான்
நமது மனம் மலர்கின்றது.
பின்னர்தான்
நம்மை நாமே
உணரத் தொடங்குகிறோம்.
நமக்குள்
விதையாகக் கிடந்த திறமைகள்
விழிக்கத் தொடங்குகின்றன.
உறக்கம் கலைந்து
நாம்
உழைக்கத் தொடங்குகிறோம்...