கவிதைகளால்தான் முடியும்
![](https://eluthu.com/images/loading.gif)
கவிதைகளால்தான் முடியும்
******************************************
உறக்கத் தேவதையால்
ஆசிர்வதிக்கப் படாதது
பலரின் இரவுகள்
அவளின் சாபங்களோடு வாழ்வது
அவ்வளவு எளிதல்ல
எப்படியேனும் கடந்தாக வேண்டும்
ஆசிர்வாதம் பெறாத அந்த இரவுகளை
கவிதைகளால்தான் அது முடியும்
விழித்தெழுக எழுத்துகளே
கவிதைகளுக்கென
ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் நீங்கள்!