தோல்வி நிலையில்லை தோழா

தோல்வி நிலையில்லை தோழா
தொடர்ந்து போராடு தோழா
வாடிய ரோஜா மலரும் – உன்
வாழ்க்கையும் ஓர்நாள் ஒளிரும்
நாடிய செல்வம் கிட்டும்
நால்திசை உன்பெயர் எட்டும்!
காய்ந்து கிடக்கும் பாலை – ஒரு
காலம் வந்தால் சோலை
ஓய்ந்து போன உன் கரம்
ஓங்கி நிறகும் ஒரு தினம்!
இலையுதிர்ந்த மரமே – அது
இறைவன் தந்த வரமே
காற்று வந்தால் உதிரும்
காலம் வந்தால் கனியும்!
இருளுக்கு பின்னே வெளிச்சம் – அது
இன்றைய வாழக்கைக்குபொருத்தம்
வறுமைக்கு பின்னே வளமை!
வாழ்க்கையே எண்ணங்களின் அருமை!