ஒரு பயணப் பாடல் - சிஎம் ஜேசு
என்னோட பயணப் பாடல்
* * * * * * * * * * * * * * * * * * * * *
சண்ட சண்ட சண்ட சண்ட
எங்கப்பாத்தாலும் சண்ட
கோவ அடையுரா - மனுஷன்
பாத மாறுறா
வேகம் ஓட்டுறான் - மனுஷன்
விவேகம் மறக்கிறான்
* * * * * ( சண்ட ..
வாழ்க்க ஒரு நெடுஞ்சால
வளைச்சு ஓட்டுறான் - மனுஷன் அதை
முட்டுசந்தா மாத்தி விட்டு
உயிர இழக்கிறான்
கவசம் போட்டு வண்டி ஓட்டினா
வாழ்க்கப் புல்லா உனக்கு
சிக்னல் விதி மீறி விட்டா
நாள் எல்லாமும் வழக்கு
வேண்டா இந்த வேலை - அட
தாண்டாத கட்டுப்பாட்ட
* * * * * * * * * * * * * * * * * * * * ( சண்ட ..