உன் கையுடன்
துணிவு மட்டும்
துணையிருந்தால்
தூசில் கூட
தூரிகை கொண்டு
ஓவியம் ஒன்றை
படைத்திடலாம்!
ஏற்றி விட
ஏணியாய் ஒருவரிருந்தால்
வானம் வரை
பாலம் அமைக்கலாம்!
நீ செய்யும்
காரியங்கள் எல்லாம்
வெற்றியைத் தர
வெறும் நம்பிக்கை போதா!
தாங்கும் கை ஒன்று
தூணாய் உன் கையுடன்
துலங்கிட வேண்டும்!