கலியுகத்தில் கடவுள்
குழந்தையை நாம் கண்டித்தாலும் சரி அடித்தாலும் சரி
அடுத்த கணமே அதனை மறந்து நம் மீது பாசமாய் ஓடிவரும்
அதைப்போலவே நாம் நம்மை அறியாமல் எவ்வளவுதான் தவறுகள் செய்தாலும்
அதனை மன்னித்து விடுகிறார் கடவுள்
இக்கலியுகத்தில் குழந்தை வடிவில் கடவுள் உருவெடுத்திருக்கிறார்
என்பதை மறுக்க எவருமுன்டோ!