என் போல் ஒருவன்

உன் தாத்தாவைப் போலவே
நீ கோபக்காரன் என்றனர்.

உன் அப்பாவை போலவே
உனக்கு புத்தி என்றனர்.

உன் மாமனைப் போலவே
நீ முரடன் என்றனர்.

பழங்கதை கோமாளியை மேற்கோள் காட்டி
அவனைப் போல நீ என்றனர்.

வருத்தமாகதான் இருக்கிறது...

அதனினும் மேலான,கொடிய,
பயம் ஒன்று என்னை
அலைகழிக்கிறது.

ஒப்பிட ஏதுவாக.....

என்னைப் போலவே,
யாரும் இருந்து விடவோ அல்லது
பிறந்து விடவோ போகிறார்கள் என்று...

எழுதியவர் : செந்ஜென (3-Nov-15, 1:48 am)
சேர்த்தது : செந்ஜென்
Tanglish : en pol oruvan
பார்வை : 86

மேலே