நாயா இருக்கிறதெல்லாம் ரொம்பக் கஷ்டம் ப்ரோ
மனிதனிடம் நாய்கள் கேட்கும் கேள்விகள்:
1. காலையில வாசல் தெளிக்கிறேங்கிற பேர்ல எங்க மேல தண்ணி ஊத்தி எழுப்பித் துரத்திவிடுவீங்க எங்க பத்தரை மணி வரைக்கும் தூங்குற உங்க புள்ள மேல ஊத்துங்க பாப்போம்
2. மீந்துபோன சாப்பாடுனா எங்களுக்குத்தானா? ஒரு நாளாவது நல்ல சோறு போட்டிருப்பியா? நீ எது போட்டாலும் தின்றதுக்கு நான் என்ன உன் புருஷனா?
3. லீவ் நாள்ல நீ தூங்கணுங்கிறதுக்காக மதிய நேரம் உன் பசங்களை அவுத்துவுடுறியே அதுங்க எங்கள கல்லை விட்டு அடிச்சு விளையாடுதுங்க நாங்கள்லாம் தூங்கறதா இல்லையா?
4. எவனையாவது திட்டணும்னா போதும் யோசிக்காம அறிவுகெட்ட நாயே, சோம்பேறி நாயே, நன்றி கெட்ட நாயேனு ஆரம்பிச்சுடறீங்க ஏன் மூளைகெட்ட முகேஷு சோம்பேறி சுரேஷு நன்றி கெட்ட நரேஷுனு திட்ட வேண்டியதுதானே?
5. நீங்க மட்டும் கூட்டம் கூட்டமா சேர்ந்து குடிப்பீங்க ஆனா நாங்க நாலு பேர் சேர்ந்தாலே நாய் வண்டியை வரவெச்சு புடிச்சுக் குடுத்துறீங்க இது எந்த ஊர் நியாயம்கிறோம்?
6. நீ மட்டும் உன் ஆளோட மணிக்கணக்கல கடலை போடுவே ஆனா நான் ஒரு டாக் டாவை கோட்டிங் குடுத்தா கல்லால அடிப்பே. வயிறெரிஞ்சு சொல்றேன் உனக்கெல்லாம் ஒரு பொண்ணும் உஷாராகாது!
நாயா இருக்கிறதெல்லாம் ரொம்பக் கஷ்டம் ப்ரோ.