ஹைக்கூகள்

தலைவாரி விடுகையில்
அம்மாவை நினைவுப்படுத்துகிறார்
சலூன்கடைக்காரர்...
************
பாலம் முழுவதும்
நிரம்பி வழிகிறது
கட்சி பெயர்கள் ...
*************
ஆட்சிக்கு வந்தவுடன்
நாடே வெள்ளையாகிறது
மீண்டும் அழுக்காக ...
*********************
சுத்தம் தான்
சோறு போடுகிறது
சலவைத் தொழிலாளிக்கு
************************

எழுதியவர் : சுகுமார் சூர்யா (4-Nov-15, 4:13 pm)
Tanglish : haikkookal
பார்வை : 153

மேலே