தமிழ் அழகு

வானவில்லில் நிறங்கள் அழகு
வசந்தத்தில் தென்றல் அழகு
உதயத்தில் கதிர்கள் அழகு
நதியில் ஆடும் அலைகள் அழகு
சோலையில் மலர்கள் அழகு
மலரிதழில் பனித்துளிகள் அழகு
மாலையில் வானம் அழகு
வானத்தில் முகில்கள் அழகு
முகில் பொழிந்தால் பூமிக்கு அழகு
பூமிக்கு இயற்கை அழகு
இயற்கைக்கு பசுமை அழகு
பசுமைக்கு பூங்கவிதை அழகு
கவிதைக்கு கற்பனை அழகு
கற்பனைக்கு தமிழ் அழகு !
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Nov-15, 6:44 pm)
Tanglish : thamizh alagu
பார்வை : 126

மேலே