கல்யாணத்துக்கு போகலாமா
(லாரியில் ஒரு ஊரே ஏறி திருமணத்திற்கு செல்லும் நிகழ்வொன்றை கண்ட பொழுது, லாரியை ஒரு ஓடமாக கற்பனை செய்ய தோன்றியது)
லாரி மேல ஏறி நாமும் போலாமா
ஐலசா ஏ போலாமா ஐலசா
குட்டிக் குட்டி வாண்டுகள கூட்டிவாங்க
ஐலசா ஏ கூட்டிவாங்க ஐலசா
சண்டக்கார பங்காளிய தூக்கிவாங்க
ஐலசா ஏ தூக்கிவாங்க ஐலசா
பேண்டு பார்ட்டியும் கூடஏத்து ஆடிப்போலாம்
ஐலசா ஏ ஆடிப்போலாம் ஐலசா
சீர்வரிசைய பாத்து ஏத்துங்க சித்தீகளா
ஐலசா ஏ சித்தீகளா ஐலசா
சின்னப்பொண்ணு செல்லக்கண்ணு போதும்பொண்ணு
வந்தீகளா ஐலசா ஏ வந்தீகளா
பெருத்தமாமா கருத்தமச்சான் ஒல்லித்தாத்தா
வாரீயளா ஐலசா ஏ வாரீயளா
வயலுப்பக்கம் உழுகப்போன சித்தப்புகளே
வாங்கப்போலாம் ஐலசா ஏ வாங்கப்போலாம்
லாரி முழுதும் நெறஞ்சிருச்சு கெளம்பலாமா
ஐலசா ஏ கெளம்பலாமா ஐலசா