பிரிவு என்பது பிரிவதற்கல்ல

பிரிவு என்பது பிரிவதற்கல்ல!
பிரிந்த உள்ளம் காட்டிய
பரிவைப்பற்றி தெரிவதற்கு!
பிரியாத போது
தெரியாத பாசம்
பிரிந்த பிறகு
அறிய வரும்!
ஆதலால் பிரிவு ஓர் அரிய வரம்!
பிரிவு பிரியத்தை கூட்டும்!
பிரிவே இல்லாத மனிதன் இல்லை!

வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும்
பிரிவு மனிதனை கடந்து செல்கிறது!
பல நினைவுகளை கொடுத்து செல்கிறது!

பிரிவு ஒரு நெல்லிக்காய் சுவைப்பதைப் போல
பிரியும் நேரத்தில்
புளிப்பை போன்ற ஒரு சுவை!
பிரிந்த உள்ளத்தை
நினைக்கும் நேரத்தில்
நீர் அருந்தினால் கிடைக்கும் இனிப்புச்சுவை!

பிரியும் கண‌த்தில்
நெஞ்சத்தை கனக்கவைத்து
கண்ணீரை தோற்றுவிக்கும்
இது ஒரு கண்ணீர் சுரப்பான்!
நினைவுகள் காற்றாய் வந்து
கண்ணீர் துடைத்து
நெஞ்சத்தை குளிர்விக்கும் போது
பிரிவும் கொஞ்சம் இன்பம் கொடுப்பான்!

நமக்கு பிரிவு அடிக்கடி வேண்டும்!
பிரிவதற்கல்ல!!
பிரிந்த உள்ளத்தைப் பற்றி தெரிவதற்கு!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (6-Nov-15, 8:13 am)
பார்வை : 867

மேலே