மனசுக்குள் வலிக்கும்

ஒருதலையா காதல் செஞ்சா
###ஒடஞ்சு போகணும் மனுசா
தறுதலைய பெத்துப்போட்டா
###இடுஞ்சு போகணும் முழுசா
######இடுஞ்சு போகணும்

ஆறுதல கொடுக்க இங்க
###யாரு மில்லைங்க வாழ்வில்
மாறுதல அளிக்க எவரும்
###விரும்ப வில்லைங்க இப்ப
######விரும்ப வில்லைங்க

தப்பா நாலுவார்த்த பேசிப்புட்டா
###ரொம்ப தொல்லைங்க நீங்க
பேசும் வார்த்தைகளை கொறச்சுக்கிட்டா
###தப்பு இல்லீங்க சரியா
######தப்பு இல்லீங்க

சின்னக்குடும்ப கூட்டுக்குள்ள
###பலகுட்டி முள்ளுங்க வந்து
வாழ்க்கையத்தான் பொறட்டிபோடும்
###எட்டி நில்லுங்க பாத்து
######எட்டி நில்லுங்க

சிங்காரமா வாழத்தானே
###யாருக்கும் பிடிக்கும் அதிலே
காரம் கொஞ்சம் அதிகமானா
###மனசுக்குள் வலிக்கும் மக்கா
######மனசுக்குள் வலிக்கும்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (6-Nov-15, 8:19 am)
பார்வை : 137

மேலே