அல்லக்கை
அரசியல் என்று வந்துவிட்டாலே கொள்கையும், நோக்கமும் காணாமல் போகும்.
இதற்கு யாரும் விதிவிலக்கல்ல.
அப்படி எதற்கும் அசைந்து கொடுக்காமல் வாழ்ந்து காட்டியவர்கள் எல்லாருமே எதுவுமே சேர்த்து வைக்காமல், பெயர், புகழின்றி ஒன்றுமேயில்லாமல் காணாமல் போயிருக்கிறார்கள்.
இது தான் தற்கால அரசியல்.
இதை புரிந்து கொள்ளாதவரை தலைவர்களின் பின்னால் நாம் ஓடிக்கொண்டுதானிருப்போம்.
ஏன்,
நானே நாளைக்கு அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் என என்னாலேயே சொல்ல முடியாது.
அரசியல் ஒரு கைப்பிடி இல்லாத கத்தி போன்றது.
பெரிய அளவில் இல்லையென்றாலும் சில பேரையாவது பார்த்திருக்கிறேன்.
எவ்வளவு பேசினாலும் பெயர்,புகழ்,மக்கள் செல்வாக்கு எல்லாம் வேண்டுமென்றால் பணம் வேண்டும். பணம் வேண்டுமாயின் ஏதேனும் ஒரு வழியில் விரைவாக சம்பாதிக்க வேண்டும்.
அந்தக்காலத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தது. வேளாண்மை செய்யும் நேரம் போக மீதமிருந்த நேரத்தில் நாடு மீது பற்றுக்கொண்ட சமூக ஆர்வலர்களான நம் தாத்தன்கள் கட்சிப் பணிகளில் ஈடுபட்டனர்.
ஆனால்,
இன்று நிலைமை அப்படியாயிருக்கிறது ???
பணமிருந்தால் மட்டுமே உடனிருக்கும் அல்லக்கைகளின் எண்ணிக்கை மிகுதியாயிருக்கும். அளவுக்கதிகமாக பணம் சேர்த்தால் மட்டுமே அரசியல் செலவுகளை சமாளிக்க முடியும். அதற்கு நிரந்தர வருவாய் வரக்கூடிய தொழில்கள் தேவை. அரசியல் செல்வாக்கை வைத்து எளிதாக பணம் சம்பாதிக்கக்கூடிய வேலைகளை அடிக்கடி செய்துக்கொண்டேயிருக்க வேண்டும். உங்கள் கட்சியிலேயே உங்கள் மதிப்பு உங்கள் பணத்தை வைத்துதான் தீர்மானிக்கப்படும். ஒரு நாளைக்கு குறைந்தது பத்தாயிரமாவது செலவிருக்கும்.
இவ்வளவு இருக்கிறது.
பிழைக்க வேலைக்கு போகாமல், அரசியலையே தொழிலாக கொண்டு வாழும் பிறவிகள் இருக்கும் ஒரே ஒரு நாடு இந்த புவியில் இருக்குமானால் நான் உறுதியாக சொல்லுவேன் அது நமது இந்திய நாடென்று.
இன்னும் பேசுவோம் !
#எழிலன்