சன்னல் திரை விலக்கி
சன்னல் திரை விலக்கி
ஒரு மின்னல் வீசப் பார்க்கிறேன்
அவள் பின்னல் கூந்தலில்
ஒரு சின்ன ரோஜா சிரிக்கக் காண்கிறேன்
தாவணி மிதக்கும் அவள் பொன் மேனியில்
ஒரு தங்க ரதம் அசையப் பார்க்கிறேன்
புன்னகை தவழும் அவள் இன்னிதழ் மௌனத்தில்
காதல் அலைகளின் காவிரி ஓசை கேட்க்கிறேன் !
----கவின் சாரலன்