நானும் தொலைத்தேன் மனசாட்சி - ஆனந்தி

என்ன தவறு
செய்திட்டால் அவள்
உன்னை நேசித்ததை
தவிர.....

ஈனப்பிறவியே
என்ன குறைக்கண்டாய்
அவளில்....

ஆத்திரத்தில் ஆவேசம்
காட்டினாயா?
வேசம் கட்டினாயா?
தார் சாலை என்றும்
பார்த்திடாது....

பொதி மாடா? அவள்
அடித்து அடித்தே
கொன்றிட
எண்ணப்பட்டாயோ?

பறை அடித்துப்
பறைச் சாற்றினாயோ
ஆணவத்தின்
வீரத்தை.....

அகந்தையில்
அழிந்திடுவாய்.
இப்படி ஒருவன்
இருந்திட்டான்
என்ற தடயமே அற்று....

அடித்ததில்
வலித்தது அவளது தசை
என நினைத்தாயோ?
அவளுக்கும் ஓர் மனம்
இருப்பதையே
மறந்தாயோ?

ஆவேசம் கொஞ்சம்
குறைத்துக் கொள்
என்ற என் தாயுன்
வேண்டுகோளில்
நானும் அவனை
தட்டிக் கேட்காமல்
விட்டேன்.....

நினைக்கையில்
வலிக்கிறது அவளது
வலி
என்னுடயதாய்....

எழுதியவர் : ஆனந்தி.ரா (7-Nov-15, 9:14 am)
பார்வை : 112

மேலே