அபிஷேக வேறுபாடு

பசியால் துடிக்கும்
பிஞ்சுக் குழந்தைகளுக்கு
கொஞ்சம் பால் தருவதைவிட
அபிமான நடிகரின் பட பேனருக்கு
குடங் குடமாய்ப் பாலைக் கொட்டி
தெருவில் பாலாற்றை
ஓட வைப்பதன்றோ
புண்ணியம் தரும் செயல்.

பள்ளி செல்லும்
ஏழை மாணவனுக்கு
உதவுவதைவிட

புராண காலத்தில்
இருந்ததாகச் சொல்லப்பட்டு அழிக்கப்பட்ட
நரகாசுரனை
ஆண்டுதாறும் மறக்காமல்
நீத்தார் நினைவை நாள் அனுசரித்து
இயற்கைக்கும் உயிரனங்களுக்கும்
ஊறு விளைவிக்கும்
பட்டாசுகளை வெடித்து
காசைக் கரியாக்கி
நரகாசுரனுக்கு நாங்கள் நடத்தும்
பட்டாசபிஷேகமும் புண்ணியம்
தரும் அருஞ் செயல் தான்

எழுதியவர் : மலர் (7-Nov-15, 9:39 am)
பார்வை : 97

மேலே