மகிழ்ச்சியின் முயற்சி

முகமறியா மழலையின்
முத்தம் சுகமானது...!

முகவரி அறியாதவனின்
உதவி சுகமானது...!

மலை பாதை
பயணத்தின்
மழை சுகமானது...!

பேருந்துக்கு சில்லறை
போதவில்லையென்றாலும்
பேதையாய் பேசிக்கொண்டே
வீடுதிரும்பியபோது
வறுமை சுகமானது ....!

ஊடலின்றி
ஒரே படுக்கையில்
பலர கூடியுரங்கியபோது
நட்பு சுகமானது...!

நண்பனின் தங்கை
தன்னையும் அண்ணா
என்றழைப்பதும் சுகமானது...!

நண்பனின் காதலியை
உரிமையோடு தங்கை
என்றழைப்பதும் சுகமானது...!

அத்தங்கையின் செல்ல
புகார்களை நாட்டாமை
செய்வது சுகமானது..!

உன் மனைவி
வந்ததும் பார்க்கலா
என்ற தாயின்
கேலியும் சுகமானது...!

காதலை புரிந்துகொண்ட
தந்தையின் புதிர்
பேச்சும் சுகமானது...!

எத்தனை கேலிசெய்தாலும்
சண்டையே போட்டாலும்
வெளியே செல்லும்போது
"பார்த்து போ "என்கிற

அனைவரின் அன்பு சுகமானது ..!

மொத்தத்தில் வாழ்வு சுகமானது ....!

எழுதியவர் : பா.பரத் Kumar (7-Nov-15, 2:45 pm)
சேர்த்தது : பாமரன் பாபரத்
பார்வை : 607

மேலே