பூகோளக் காதல்

பெண்ணே
நீ கடும் சூரியனாய்
எனைச் சுட்டெரித்தாலும்
நீ தொடும் பூமியாய்
உனைச் சுற்றிவருகிறேன்

ஏன்தெரியுமா
பூமி சூரியனின் ஒரு துகள்
நீ தேவதையின் மறு நகல்
நம்பிக்கை வைத்தேன்
என்றாவது வருவாய்
என் மனதில் ஏற்றிவைக்க
காதலெனும் சிறு அகல்

உன் அண்ணன் என்ன
சந்திரனா இல்லை
ஆயுதம் ஏந்திய
ஏந்திரனா ?

அவன் ஏன் என்னை
சுற்றிவருகிறான் ?

என் கரம் ஒடித்து எடுக்கவோ
இல்லை
உன் கரம் பிடித்துக் கொடுக்கவோ ?

பதில் கூறாய் காதலியே
நீ உம் என்றால்
என் உறைவிடம் உன் காலடியே
நீ இல்லையென்றால்
என் மறைவிடம் உன் காலடியே ...

என் காதல்
பூலோகத்தில் பூத்த
பூகோளக் காதலடி
கட்டிக்கொள் எனும் பூச்சொல்லை
உன் செவ்வாய் மூலம்
என் காதில் அடி

எழுதியவர் : குமார் (7-Nov-15, 8:04 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 204

மேலே