திசையன்விளை ஊரின் பெயர்க் காரணம்
திசையன்விளை – பெயர்க் காரணம் ?
வலைத்தளம் ஒன்றின் விளக்கம் காண்போம்!.
அதாவது ----
திசைக் காவலர் விளை என்ற சொல்
மருவி ---
திசையன் விளை ஆயிற்று.
அப்படியானால் திசைக்காவலர் என்பவர் யாவர்?
மானவீர வளநாடு என்பது
பாண்டியர்களின் ஐந்து வள நாடுகளில்
ஒன்றாக இருந்தது!
அதன் பாதுகாப்பு மையமாக அப்போது
திசையன்விளை இருந்தது.
அந்நாட்டின் போர்க் காவலர்கள்
திசையன்விளையின் நான்கு திசைகளில் வசித்தபடி
நாட்டை பாதுகாத்தார்கள்;
அதனால் அவர்களை திசைக் காவலர்கள் என்பர் .
அவர்கள் அப்படி பாதுகாத்ததற்கு ஆதாரமாக இருப்பது
திசையன்விளையின் நான்கு மூலை/திசை குக்கிராமங்களாம்....
அதாவது .....
கீரைக்காரன்தட்டு, மொட்டையன்தட்டு, இடச்சிதட்டு, பள்ளந்தட்டு என்பன!
.
தட்டு என்ற சொல் கண்காணிப்பு கோபுரத்தைக் குறிக்கிறது!
எனவே நான்கு திசைகளிலும் இருந்த கண்காணிப்பு கோபுரத்திலிருந்தபடி
திசைக் காவலர்கள் நாட்டை காத்தனர் எனக் கொள்ளலாம்!
சரி! விளை என்றால் என்ன?
விளை என்றால் பயிர் விளை நிலம்!
ஒவ்வொரு திசையிலும்
அந்த திசைக்கான காவலர்
வசித்த இடத்திலேயே
அந்தக் காவலருக்கான விளைநிலமும் இருந்தது!
ஆக,
திசையன் என்பது திசைக் காவலரைக் குறிக்க --
விளை என்பது காவலரின் விளைநிலம் அல்லது வயலைக் குறிக்க ---
திசையன்விளை என்பது பெயரானது!