உரிமைகள் பறிக்கப்படும்
உன் நிலம் உன் வான்
என்று நீ நினைத்த இடம்
உனக்கில்லை என்று
உரிமைகள் பறிக்கப்படும்-போது
நீ ஆயுதம்தான் தூக்குவாய்
உன் காதல் என்னவள்
என்று நீ வாழ்ந்த அவள்
உனக்கில்லை என்று
உரிமைகள் பறிக்கப்படும்-போது
நீ தாடிதான் வளர்த்து கொள்வாய்
உன் உயிர் உன் குழந்தை
என்று நீ நினைத்த சிசு
உனக்கில்லை என்று
உரிமைகள் பறிக்கப்படும்-போது
நீ உடைந்துதான் போவாய்