அழகு தமிழ்

இருபதாயிரத்துக்கு பட்டி பார்த்து
வண்ணங்கூட்டி இறுமாந்திருந்தேன்
என் நாற்சக்கர வண்டி பார்த்து....

பளபளக்கும் பலகை இதுவென்று
இரும்புக் கம்பிகொண்டு 'A'
எழுதிப் பழகியுள்ளனர் எங்கள்
வளாக இளங்குருத்துக்கள்.....

'அ' எழுதியிருந்தால்
அழகு தமிழென்று
அக மகிழ்ந்திருப்பேனோ..?
'நோ'........!
---- முரளி

எழுதியவர் : முரளி (8-Nov-15, 8:04 pm)
சேர்த்தது : முரளி
பார்வை : 69

மேலே