விஞ்ஞானத்தின் விளைவுகள்

அன்று
வீடு தேடி நலம் விசாரித்த
தபால் பெட்டிகள்
அதன் ஓடு தேடி கிடப்பது
விஞ்ஞானத்தின் விளைவே

அன்று
கம்பீரம் தந்த
கம்பங்கூழ்
பீசா பிசாசிற்கு
கம்பளம் தந்தது
விஞ்ஞானத்தின் விளைவே

காதலர்களே
நீங்கள் தொலைபேசியில்
தொடர்புகொள்ள முயற்சிக்கும் நபர்
வேறொருவருடன் பேசிக்கொண்டிருப்பது
விஞ்ஞானத்தின் விளைவே

அன்பு பண்பு
நட்பு கற்பு
இந்தப்புனிதப் பூக்கள் எல்லாம்
வாசம் குறைந்தது
விஞ்ஞானத்தின் விளைவே

சிட்டு கட்டும் பட்டுக்கூடு
கொண்டுள்ள முட்டு வீடு
இன்று காணமல்போனது
விஞ்ஞானத்தின் விளைவே

தந்தை கையில் ஒரு ஐ போன்
தாயின் காதில் ஒரு ஐ போன்
நடுவே ஐ யோ பாவம்
குழந்தை

அன்று
பெண்ணின் செவ்வாயை
கண்டு வியந்த நாம்
இன்று
விண்ணின் செவ்வாயை
கண்டு கூட வியப்பதில்லை

அரிக்கமேட்டு கல்வெட்டுக்களை
அமெரிக்க கல்வீடிற்குள்
அமர்ந்து படிக்கின்றான்
அமராபுரித் தமிழன்

அலைபேசியின் தொடுதிரை
அலையாமல் அனைத்திற்கும்
தொடுத்தது விடுமுறை

மோதினால் வண்டு
அதன் எடையைக் கொண்டு
கோலப்பூவும் இலைசாயும்
விமானத்தை கொண்டு
கோபுரமும் தலைசாயும்
உலக வர்த்தகமும் தரைசாயும்
இது வீண் ஞானிகள் வீணடித்த
வின் ஞானம்

பூச்சிக்கொல்லிகள்
விவசாயிகளின்
மூச்சைக் கொல்வதும்
விஞ்ஞானத்தின் விளைவே

கனவுகளோடு பறந்த நாம்
இன்று கழுகுகளுக்கு மேலே
பறப்பது விஞ்ஞானத்தின் விளைவே

வின் ஞானத்தை
வீட்டின்
நன் மானத்திற்குப் பயன்படுத்துவோம்
நாட்டின்
தன்மானத்திற்குப் பயன்படுத்துவோம்

எழுதியவர் : குமார் (8-Nov-15, 10:40 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 715

மேலே