பெரிது பெரிது

புரிதல் இல்லாத உறவுகள்
அஸ்திவாரம் இல்லாத கட்டிடங்கள்
என்பதால் ..
எனது அன்பை நிதானமாகவும்
கோபங்களை கஞ்சத் தனத்தோடும்
மன்னித்தல்களை விரைவாகவும்
செய்திட பழகிக் கொண்டேன் ..
வாழ்க்கை மிகச் சிறியது
என்பதால் ..நான் நேசிப்பவற்றை
முத்தமிடுவதன் நேரத்தை
நீட்டித்துக் கொள்கிறேன் ..
என்னைப்
பெரிதாக்கி கொள்கிறேன் !