அண்ணா உனக்காக

அண்ணன் என்ற பெயரில்
அதிசய தோழன் எனக்கு நீ

அடிக்கடி வம்பு இழுத்து
அழ வைத்து பார்த்து
விளையாடுவாய்

நம் சண்டை தீர்க்க
நம் அம்மா வந்து
கடைசியில் அம்மாவிடம்
நாம் சேர்ந்து
சீண்டி பார்த்து
அம்மாவை சிண்டுவோம்...

நீச்சல் பழகி கொடுத்து
வாழ்கையில் எதிர் நீச்சல்
போட கற்று கொடுத்தது நீ தான்

முதன் முதல்
நீ ஹோச்டேல் போக
எப்பொழுது நீ வருவாய் என
காத்து இருந்த பொது
நீ வந்து சொன்னாய்
"எப்பொழுது உன்னை பார்ப்பேனென்று
நான் தவித்தேன்" என்று

வருடம் வருடம்
என் பிறந்த நாளுக்கு
மறக்காமல்
வாங்கி தருகிற புடவை
எத்தனை உறவுகள்
வந்தாலும் உன் உறவுக்கு ஈடாகுமா ?

அம்மா இறந்த பின்
எனக்கு நீதான் அம்மாவாக

நீ மட்டும் இல்லை என்றால்
அந்த கடவுள் இல்லை என்று தான் சொல்வேன்

அண்ணன் வைத்து இருக்கும்
தங்கைகள்
என்னை போல்
ஏதோ ஒரு விதத்தில்
கொடுத்து வைத்தவர்கள் தான்

எத்தனை பிறப்பு
எடுத்தாலும்
உனக்கு தங்கையாக
பிறக்கவேண்டும் என்று தான்
கடவுளிடம் வேண்டுவேன்








எழுதியவர் : தமிழ் gomathy (7-Jun-11, 9:35 pm)
Tanglish : ANNAA unakaaga
பார்வை : 484

மேலே