இனிய தீபாவளி

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

அருள் ஒரு கவிதையால் வாழ்த்து
என உள்ளம் சொல்கிறது
பந்துமுனைப் பேனாவும் வெள்ளைக் கடதாசியும்
என்னிடம் விடை பெற்றுப் பல ஆண்டுகள்
என் முன்னே விரிக்கப்பட்ட மடிக்கணினி
விசைப் பலகையில் எழுத்துகளை என்
விரல் நுனிகள் மெல்ல முத்தமிடுகின்றன
கூகிள் கவனமாக மொழி மாற்றுகிறது இதோ
என் கவிதை பிறக்கிறது!
கொடுமை செய்பவர்களைக்
கிருஷ்ணபரமாத்மா கொன்று விடுவாராம்
நல்ல காலம் பிறக்குமாம்
தீர்வு வருமாம் பிரச்சனைகள் எல்லாம் தீருமாம்
மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்களாம்! ஆஹா
கேட்க எவ்வளவு நன்றாக இருக்கிறது!
அவையாவும் சான்றுகள் இல்லாத
புராணக் கதைகள் கதைகளாகவே இருக்கட்டும்
அவையுடன் எனக்கு ஏன் வீண் சோலி?
இருள் நீங்கி வாழ்வில் ஒளி பிறக்கட்டும்
கொடியவர்கள் திருந்தட்டும் அல்லது அழியட்டும்
இடியமினைக் , கடாபியை, சதாம்உசேனை........என்ற
வரிசையைப் பார்க்கும்போது
இதிலே ஏதோ விஷயம் இருக்குது போலவும் தெரியுது.
எனக்குள்ளும் அப்படி நடக்குமோ நடக்காதோ
என எண்ணங்கள் வரத்தான் செய்கின்றது
நம்மில் பலர் ஒன்றை நினைக்க
பரமாத்மா என்னத்தை நினைக்கிறாரோ?
“நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை” என்கிறார் கண்ணதாசன்
சரி அதைக் கடவுளே பார்க்கட்டும்
நான் ஒன்றும் நாஸ்திகன் அல்லன் அசல் சிவ பக்தன்!
தம் மக்களைக் கொடுமைப் படுத்தியவன்
உரிமைகளைப் பறித்தவன்
மின்சாரமின்றி இருட்டுக்குள் வாழ விட்டவன்
தொலைத்தொடர்புகளைத் தடை செய்தவன்
எரிபொருள் தடை என அதுக்கும் மேலே
செல் மற்றும் குண்டுத் தாக்குதல்கள் என்று
அன்று நரகாசுரன் செய்ததற்கும் மேலாக
எத்தனை அவலங்கள் எத்தனை மரணங்கள்
எதைச் சொல்ல எதை விட
பொறுத்தார் பூமி ஆள்வார்களோ?
கும்பலாக மாண்டுபோவார்களோ? யாரறிவார்?
இறுதியில் கொடிய நரகாசுரன் மாண்டான்
மக்களுக்கோ ஒரே மகிழ்ச்சி
நீராடினார்கள் புது ஆடைகளை அணிந்தார்கள்
சுவையான பலகாரங்களை உண்டார்கள்
பட்டாசு கொளுத்திக் கொண்டாடினார்கள்
இருட்டுக்குள் இருந்த அவர்கள் வரிசை வரிசையாகத்
தீபங்களை ஏற்றி மகிழ்ந்தார்கள்.
தீபாவளி வந்தது!
நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும் என்ற
நம்பிக்கையில் நாங்களும் கொண்டாடுவோம்!
என் கவிதைகளைப் பொய் சேர்த்து
நான் அழகு செய்வதில்லை
பொய் எப்படி அழகாகும்?
என் பெயரிலும் அருளுண்டு
ஆண்டவனோ அருள் மயமானவன்
அருள் புரிவான்! இனிய வாழ்த்துக்கள்!
பொன் அருள் – 09-11-2015.

எழுதியவர் : பொன் அருள் (10-Nov-15, 4:18 am)
சேர்த்தது : பொன் அருள்
Tanglish : iniya theebavali
பார்வை : 144

மேலே