மங்கல தீபாவளி

கங்கை யமுனை சரஸ்வதி காவிரி
திங்கள் கதிரும் ஒளிஉலா வந்திடும்
மங்கையர் கண்ணிலும் நல்விளக் கேற்றிடும்
மங்கல தீபா வளி

-----கவின் சாரலன்
மங்கையர் கண்ணிலும் நல்விளக் கேற்றிடும் ----

பெண்கள் பொதுவாக விளக்கேற்றுவார்கள். தீபாவளித் திருநாளில் கண்களிலும் மகிழ்ச்சித் தீபமேற்றிக்
கொண்டாடுவார்கள் என்பது பொருள் .

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
புதுக் கவிதையுடன் யாப்பிலும் எழுதிப் பழகுங்கள் .
இலக்கிய மரியாதை பெறுவீர்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Nov-15, 10:06 am)
பார்வை : 59

மேலே