மீண்டும் மீண்டும் - வெல்வது தமிழே
![](https://eluthu.com/images/loading.gif)
தோன்று நிலை தொட வொன்னா
தொன்மை தொட்டதென் தேன்தமிழே!!!
பாட்டனும வன்முப் பாட்டனும் பயின்று
பகிர்ந்த தென் பைந்தமிழே !!!
நாவிற் கினியநற் சுவைபொ திந்ததோர்
"ழ"கரம் சூடியதென் நற்றமிழே !!!
இலக்கணம் வழுவா இலக்கிய மெடுத்து
இயம்பிய தென் இயற்றமிழே !!!
முச்சங்கமும் முன்னிலை நல்கி யதோர்
மூத்த மொழியென் முத்தமிழே !!!
தீராச் சுவையிற் திகட்டா தொரு
பாயின்பம் பகர்வதென் தீந்தமிழே !!!
சென்ற விடமெல்லாஞ் சிறப்பு சேர்
செம்மொ ழியென் செந்தமிழே !!!
தென்னன் புகழ் தன்னைதிக்கு தோறும்
தெளித்த தென் தெளிதமிழே !!!
காலத்தா லழியாக் கடவுள் நிலை
கண்ட தென் கன்னித்தமிழே !!!
நாகரிகம் மெல்லநா வடைத்திடினும் நாளும்
நாவில் நவில்வது நறுந்தமிழே !!!
- பா.வெ.