படைத்திடுவீர் புத்துலகு
மனிதரென உருவத்தால் வாழ்ந்தபோதும் ,
மதிநுட்பம் இல்லாத மிருகமாக ,
பனிக்கட்டிப் போல்நீரில் மிதப்பீர் ! பக்திப்
பாசுரங்கள் பாடி நிதம் குளம் குட்டைதன்னில் !
மனிதரெலாம் மிருகமுடன் கூடி யாடி
மேனியினை கழுவியநீர்தன்னை மொண்டு
நனிபுகழ்ந்து தீர்த்தமெனக் குடிப்பீர் ! தன்மை
நன்னீரை விட்டுவிட்டு புன்மை நெஞ்சால் !
அறிவியலை ஆய்ந்துணர்ந்த மேலைநாட்டார்
அண்டவெளி அத்தனையும் சுற்றிச் சுற்றி
பறந்திட்டார் ! ஆனாலும் மூடர் பாடும்
பரமனையும் பிரம்மவிஷ்ணுவையும் கண்டாரில்லை !
நரிமனத்தார் ஆரியரின் வலையில் வீழ்ந்து
நலிகின்ற தமிழினத்தீர் கல்லை நட்டு
சாமியென வணங்காதீர் , செல்வந்தன்னை அழிக்காதீர்
ஊதுபத்திக் கற்பூரம் சூடத்திற்க்காய் !
அழிக்காதீர் ! உள்ளமதில் தந்தை தந்த
அணையாத பகுத்தறிவு சுடர்விளக்கால்
அழிக்கின்ற சாதிமதம் கடவுள் வாழும்
அறியாமை இருள்தன்னைப் போக்கி செல்வம்
கொழிக்கின்ற குருக்கெளனும் பார்ப்பான் தன்னை
குதிக்காமல் அடக்கிடுவீர் ! உழைக்கச் செய்வீர் !
பழியற்ற தமிழினமென் னும்பேர் தாங்கி
படைத்திடுவீர் புத்துலகு மேன்மைச் சேர்ப்பீர் !