மீண்டும் மீண்டும்

மழைக்கால இரவில்
இளையராஜாவின்
இசையை மிஞ்சும்
தவளைகளின்
ராத்திரி கச்சேரி

குளிர் நடுக்கத்தில்
கதவு திறந்து
காது அருகே
வாய் வைக்கும்
என் வீட்டு செல்ல
நாய்குட்டி

முப்பரிமாண தோற்றத்தில்
முழுதாய் ஆசி வழங்கும்
எங்கள் ஊர் குளத்தங்கரை
கொண்ணைமரத்து
பிள்ளையார்

நகக்கீரலின்
எரிச்சல் தாண்டி
அம்மா வைத்த
வயல்காட்டு
நண்டு குழம்பின் வாசம்

முதல்முறை மீன் பிடிக்கையில்
பிடித்த ஒரு மீனோடு
வீடு திரும்ப வேண்டாம் என்று
தனக்கு இருந்த ஒரு மீனையும்
எனக்கு தந்த நண்பனின்
பெருந்தன்மை


வேட்டை நாயோடு
தோட்டத்து அணிலை
கல்லெரிந்து கொன்ற
என் முதல் கொலை

ஒரு வானந்தரத்தையே
கொளுத்தும் சிறு தீக்குச்சி என
என் பள்ளி பருவத்தை
பற்ற வைத்த என் முதல் காதல்

ஒரு முறையே பிறப்பு
ஒரு முறையே இறப்பு
ஒரு முறையே வாழ்வு
என்பது போல்
எனக்குள் வசந்தம் வீசிய
அவள் வரவு


என்னை மென்று
திண்று துப்பிய
அவள் பிரிவு

இந்த பால்ய நினைவுகள் தான்
நான் விழந்த பொழுதெல்லாம்
எழுந்து இயங்க
என்னை மீண்டும் மீண்டும்
தூண்டும்

எழுதியவர் : வேலு வேலு (14-Nov-15, 12:16 pm)
Tanglish : meendum meendum
பார்வை : 109

மேலே