எத்தனை நினைவுகள் காதலுக்கு
வேப்பம் பூ இனிக்கிறதே
வேறென்ன காதலை சொல்ல
கசப்பும் இனிக்குமென்று
காதலித்தால் தெரியுமென்று
உணரும் வரை புரிவதில்லை
உலகத்திலே அது புதிர்தான்
தனிமையிலே சிரிக்கும்போதும்
நட்சத்திரங்கள் என்ன சொல்லும்
நிலவோடு சேதி சொல்லி
பால் நிலவொளி பொழியசொல்லி
அட்சதையாய் நினைவுகள் போட
அருமையான சுகம்தான் என்ன ?
இதயத்திலே தேன்தான்யென
எடுப்பது யார் நீதான்யென
அருவியோரம் மலைமுகட்டில்
ஆடைகட்டும் ஆசைகுள்ளே
சலசலக்கும் கற்பனைகள்
பள பளக்கும் உன் பார்வையாலே!