இல்லை'யே இல்லையே

வெள்ளை சுடியில் - அவள்
வலம்வரும் வேளையில்
கொள்ளை போய்விடும் - என்
காதல் நெஞ்சம்!
கல்லையும் கரைத்திடும் - அவள்
கருவிழி பார்வை
முள்ளையும் மலராக்கும் - அவள்
மெல்லிதழ் மகிழ்ச்சி!!
கிள்ளையும் கிறங்கிடும் - அவள்
கனிகுரல் கேட்டு
இல்லை'யே இல்லையே - அவள்
நினைவுகள் இருக்கையில்!!!

எழுதியவர் : Loubri (8-Jun-11, 10:43 am)
சேர்த்தது : பிரைட்சன்
பார்வை : 336

மேலே