பிரைட்சன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : பிரைட்சன் |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 05-Jan-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-May-2011 |
பார்த்தவர்கள் | : 181 |
புள்ளி | : 91 |
மனிதம் விரும்பும் உயிரினம்....
புதைக்கவில்லை ஆனாலும் தோண்டி எடுக்கிறேன் உன் நினைவுகளை...
நகர்த்தி செல்லும் நாட்கள் நிரப்பிச் செல்கின்றன பல நினைவுகளை...!
சமையல் என்றதும் உன் நினைவுகளே நிழலாடுகின்றன...
எத்தனை கனவுகள்...
எத்தனை ஆசைகள்...
நொறுங்கிபோன என் கனவுகளும் ஆசைகளும் என் முன் வந்து ஏக்கத்துடன் எட்டிப் பார்க்கின்றன என்னருகே உன்னைத்தேடி...!!!
உன் நினைவுகளை
அழிப்பதற்கு யாருமில்லை...
அளித்தவள் நீயல்லவா...!!
என்றோ திருமணமாகி இன்னொருவருக்கு சொந்தமான பின்னும் உன்னை என்னவள் என்கிறேன்...
நீ என்னவள் தான்...
எனக்குள் வாழ்பவளை என்னவள் என்று சொல்லாமல் என்னவென்று சொல்வேன்....
நீ என்னை நினைக்க வேண்டிய தேவை உனக்கு இல்லை....
எனக்கு உன் நினைவுகளைத்தவிர வேறு தேவை ஏதும் இல்லை...
எழுத்து.காமை விட்டு விலகி
வாழ்ந்த இம்மூன்றாண்டுகளில்
எத்தனை எத்தனை மாற்றங்கள்???
கவிதை எழுத மறந்து - என்
கைகள் மரத்துப்போன கணங்கள் எத்தனை எத்தனை...
காதலி பிரிந்து காதல் கழிந்து
கணினியில் கண்களை இழந்துவிட்ட கணங்கள் எத்தனை எத்தனை...
தேடி கிடைத்தவை எதுவும் பிடிக்காமல் இன்னும் தேடிக்கொண்டே திரிகிறேன்...
எதுவும் நிலையில்லா இவ்வாழ்க்கை இன்னும் எத்தனை நாட்கள் நிலைத்திருக்க போகிறதோ...???
என்னவளின் அழகுடன்
போட்டியிடும் நிலவு
முழு நிலவான பின்னும்
அவள் அழகின் முன் தோற்று
வருந்தி தேய்கிறது.....
ஏதோ நம்பிக்கையில்
மீண்டும் வளர்கிறது...!!
மீண்டும் தோற்பதற்கு...!!!
நண்பர்கள் (6)

ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )

பாரதி நீரு
கும்பகோணம் / புதுச்சேரி

கார்த்திகா
தமிழ்நாடு

பா கற்குவேல்
மதுரை
