மாற்றங்கள்
எழுத்து.காமை விட்டு விலகி
வாழ்ந்த இம்மூன்றாண்டுகளில்
எத்தனை எத்தனை மாற்றங்கள்???
கவிதை எழுத மறந்து - என்
கைகள் மரத்துப்போன கணங்கள் எத்தனை எத்தனை...
காதலி பிரிந்து காதல் கழிந்து
கணினியில் கண்களை இழந்துவிட்ட கணங்கள் எத்தனை எத்தனை...
தேடி கிடைத்தவை எதுவும் பிடிக்காமல் இன்னும் தேடிக்கொண்டே திரிகிறேன்...
எதுவும் நிலையில்லா இவ்வாழ்க்கை இன்னும் எத்தனை நாட்கள் நிலைத்திருக்க போகிறதோ...???