புதிய விதி

வரலாற்றை மட்டுமே படித்துக் கொண்டு இருக்கும் நீயும், நானும் காலபுத்தகத்தில்
நமக்கான பக்கங்களை எழுதிவிட நினைப்பது இல்லை..

பிச்சை இட யோசித்தாலும்..
பிச்சை வாங்க (கையூட்டு) கை நீள்கிறது பலருக்கு..

கொடுக்க இருப்பவன் சட்டைபையை இருக்க மூடிக் கொள்கிறான்..

இல்லாதவன் நெஞ்சை பிசைந்து கொண்டு..
இயலாமையால் நொந்து கொண்டு போகிறான்..

ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தியது..
காந்தி புகைப்பட காகிதம் தான் என்றால்..

யாரும் பசிக்கும் போது காகிதத்தை தின்பது இல்லையே...

பசிக்கு சாப்பிடுபவனும்...
பசி தீர்ந்த பின்பு சாப்பிடுபவனும்
அருகருகே தான்.

மூலதனம் இன்றி நீ சேர்த்து வைக்கும் ஒவ்வொரு காசும்..

இந்திய தாயை நடைமேடையில் உட்கார வைக்கலாம் பிச்சை தட்டோடு..

அவளை பார்த்து அனுதாப பட....
உன் கையில் திருவோடு கூட.. இருக்காது.

யாரையும் பிச்சை எடுக்க விட வேண்டாம்..

அவன் கையில் சுத்தியோ,
கதிர் அரிவாளே கொடுத்து பார்..
அவன் சாப்பாடு தட்டை
அவனே நிரப்பிக் கொள்வான்..

வியர்வை நாற்றம் அடிக்கும் பணத்தால் சாப்பிட்டு பார்..
வயிறும், மனமும் நிறைந்தே இருக்கும்...

ஊருக்கு உணவு இட்டவனை உணவு இல்லாமல் சாகவிடாதே..

உன் மடிக்கணினியை கொஞ்சம் ஓரமாய்.. வைத்து விட்டு வா..
களை எடுக்க வேண்டும்..
நெற்வயலுக்கு...

போதும்

இனி
நீ கோவ படு
அவர்கள் பயப்படும் வரை

நீ உண்மையை பேசு..
பொய்யை அவர்கள் மறக்கும் வரை.

வளையவில்லையா? அடித்து வளை.

ஒடிந்து விட்டதா..?
இனி மற்றவை தானாய் வளையும்..

உன் கொள்கையில நீ் தீவிரமாய் இரு.

சிகப்பு சூரியன் நிறையவே இருக்கிறது கிழக்கை முட்டிக் கொண்டு..

அவன் பேசுவான் என்று நீ பேசாமல் இருக்காதே..

உன்னை அலட்சியபடத்தியவற்றை..
நீ அலட்சிய படுத்து..
உன் லட்சியங்கள் கண்முன்னே நிற்கும்.

அடி உன் கை வலிக்கும் வரை.

கைவிரலால் கோடு போடு
இந்திய நதிகள் கரைபுரண்டு ஓடட்டும்.

யாருக்கும் கைகளில் ரேகை வேண்டாம்.
தேய்ந்து போகட்டும் ரேகைகள்..

உன் ரேகைகள் இந்திய பக்கங்களில் ஒவ்வொரு எழுத்தாய் நிற்கட்டும் இது
உழைப்பு என்று.

ஏணி வைத்து ஏறிபோய்
நிலவின் கறை துடைக்கலாம்..

கிழிந்து போன இந்திய தாயின் சேலையை நம் நாட்டிலே நெய்து கொடுக்கலாம்...

அதற்காக யாரும் சட்டையில்லாமல் திரிய வேண்டாம்.

கோவில்களை பள்ளிக்கூடமாக்கு..

சாதிகளை காலையிலே
இடது கையால் கழுவிவிடு..

ஆகத்து 15ம் நாள் மட்டுமே தேசியக் கொடியை நெஞ்சில் கொண்டது போதும்..

கொடியின் முதல் வண்ணம்
கரைந்த சிகப்பு என்பதை
மறக்க வேண்டாம்...

வாயை விற்று விட்டு..
வயிற்றைக்கட்டி அழ வேண்டாம்..

ஒரு கையால் தட்டினால்
ஓசை எழாது தான்..

ஆனால் எதை தட்டினாலும்
ஓசை எழதான் செய்யும்..

முதலில் தட்டிக்கொடு..

இல்லையேல் நீயே தட்டி எடு...

இந்திய தாயை வியர்வையால் குளிப்பாட்டு..
அவள் பாலும், பன்னீரும் கேட்க வில்லை.

கிழக்கும் சிவந்து விட்டது..
சூரியன்கள் உறங்கி கிடந்தது போதும்..

வாருங்கள் புதிய விதி செய்வோம்
புதிய
இந்தியனாய்...

மஞ்சள் நிலா 🌙

எழுதியவர் : நாகராஜன் (11-Nov-15, 8:26 am)
சேர்த்தது : நாகராஜன் நகா ஸ்ரீ
Tanglish : puthiya vidhi
பார்வை : 120

மேலே