தீபாவளி

தீபாவளி நல்ல தீபாவளி
தித்திக்க வைத்திடும் தீபாவளி
வருடத்தில் ஒருநாள் வந்தேநமது
வாட்டத்தைப் போக்கிடும் தீபாவளி

உற்றார் உறவினர் ஒன்றாகி
உல்லாசம் காணும் தீபாவளி
கண்கள் காணாத வானவேடிக்கை
கண்டிட செய்திடும் தீபாவளி

பசியால் வாடிடும் பஞ்சைபராரியும்
பலகாரம் சாப்பிடும் தீபாவளி
வாடிக்கையாக பட்டினி கிடப்போர்
வயிறை நிரப்பிடும் தீபாவளி

அந்தகாலம் முதல்இந்த காலம்வரை
அனைவரும் கொண்டாடும் தீபாவளி
அரசன் முதற்கொண்டு ஆண்டிகள்வரையிலும்
ஆனந்தம் கொள்வது தீபாவளி

பிரிந்திட்ட உறவினை ஒன்றாக்கி
பேரின்பம் தருவது தீபாவளி
பெரியயோர் கால்களை சிறியவர்வணங்கி
பொன்பொருள் பெறுவதும் தீபாவளி

புதுமணம் புரிந்த மாப்பிள்ளைக்கு
முதல்முதல் வருகின்ற தீபாவளி
மாமனும் மாமியும் புத்தாடையோடு
மோதிரமும் தரும் தலைதீபாவளி

படபடவென்றே பட்டாசு வெடித்து
பார்த்து மகிழ்ந்திடும் தீபாவளி
சங்குசக்கரம் புஸ்வானம் கொளுத்தி
சகலரும் கொண்டாடும் தீபாவளி

மத்தாப்புக் கேப்பு துப்பாக்கியோடு
மழலையர் கொண்டாடும் தீபாவளி
வானவெடி குடைவெடி சரவெடியென்றே
வசதியுள்ளோர் கொளுத்தும் தீபாவளி

கொண்டாடுவேம் நாமும் தீபாவளி
குடும்பத்தில் ஆனந்தம் சேரும்படி
பண்பாடுவோம் கூடி ஒன்றாகுவோம்
பாசத்தைப் பறிமாறி பண்பாடுவோம்.

எழுதியவர். பாவலர், பாஸ்கரன்

எழுதியவர் : (11-Nov-15, 6:26 am)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
Tanglish : theebavali
பார்வை : 43

மேலே