பார்க்காதே பார்க்காதே

..."" பா(ர்)க்காதே பா(ர்)க்காதே ""...

அதிகாலையில்
ஒரு மின்னல்
அழகாய் சிரித்தது
ஆயிரம் கவிகள்
சொல்லாததை
அவளின் கண்கள்,,,

பளபளக்கும் பார்வை
கூறிய கத்தியால்
வெட்டுக்கொண்ட
காயத்தைப்போல்
வேதனையில்லாதே
குருதியின் வெளிநடப்பு ,,,

மென்மையான நெருப்பு
தன்மையாய் அணைக்க
உணர்வில் அடங்கா
உருவகமும் மில்லா
உயிரை உருக்கும்
ஓரவிழியின் பார்வை ,,,

விளங்க முடியாத
புதுவித உணர்வாய்
புயலாய் கணைகள்
சுமந்த தென்றலாய்
காயங்கள் தந்தே
களிம்பாகவும் ,,,

கற்பனை இல்லாத
மெய்யாக ஓன்று
கவிபுனைய கைகள்
காகிதத்தை நாட
எழுதும்முன்னே உன்
பார்வை பதிந்திருக்கு ,,,

வில் உமிழ்ந்திட்ட
அம்பிலும் மாலேன்
ஓரமாய் ஒதுங்கும்
பார்வையின் அன்பு
நியூட்டன் சொல்லா
விழி ஈர்ப்பு விசையிலே,,,

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (11-Nov-15, 10:33 am)
பார்வை : 471

சிறந்த கவிதைகள்

மேலே