வலிகள் தந்து காயம் செய்கிறாள்

வலிகள் தந்து காயம் செய்கிறாள் ...!!!
------

தினம் தினம்
கவிதை எழுதுகிறாள்.....
வரிகளால் மனதில் வலிகள்
தந்து காயம் செய்கிறாள் ...!!!

நான்
செய்த தவறுக்காக
தன்னை தண்டிக்கிறாள்
உண்மையை சொன்னாலும்
ஏற்க மறுக்கிறாள் ....!!!

வலிகள் இருந்தும்
நேசிக்கிறேன் அவளை ...
அவள் என்னை சந்தேகிப்பதே
என்னை எவரும் காதலித்துவிட
கூடாது என்று பயப்பிடுகிறாள் ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (11-Nov-15, 10:28 am)
பார்வை : 91

மேலே