காதலித்துப்பார்-2015

********************************************************************************************************************
* காதலித்துப்பார் -ஓர் விமர்சனம்
********************************************************************************************************************
உன்னைச் சுற்றி
இருள்வட்டம் தோன்றும்

உலகம் வருத்தப்படும்

Rate Cutter-ன்
நீளம் விளங்கும்

உனக்கு மட்டுமே
Message வரும்

Inbox
நிரம்பி வழியும்

Whats App-ஐ
கண்டுபிடித்தவன்
தெய்வமாவான்

உன் விரல்நுனி பட்டுப்பட்டே
Cell Phone Display உடையும்

கண்ணிரண்டும்
Hike-ஐக் கொல்லும்

காதலித்துப்பார்

கோபத்தில்
தலையணைப்பஞ்சை
பிய்த்து வீசுவாய்

மூன்று வேளையும்
Recharge செய்வாய்

காத்திருந்தால்
twitter-ல் tweet செய்வாய்

வந்துவிட்டால் facebook-ஐ
Close செய்வாய்

Cuestomer Care கூட
உனக்குக் Call செய்யமாட்டான்
ஆனால்-ஐ.நா சபையே
உன்னை அழைப்பதாய்
நினைப்பாய்

உன் செல்போன்
Viberate ஆகும்போது
வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்
ஒரு கலக்கு கலக்கிவிடும்

இந்த Cellphone இந்த Laptop
இந்த Simcard இந்த LCD
எல்லாம்
காதலை கௌரவம் செய்யும்
ஏற்பாடுகள் என்பாய்

காதலித்துப்பார்

இருதயத்திற்கு அடிக்கடி
Missed Call அடிக்கும்

Sun music-ல்
உனது குரலும்
ஒலிபரப்பாகும்

உன் நரம்பை-நீயே
அறுத்துக்கொண்டு
உனக்கு நீயே
கட்டுப்போட்டுக்கொள்வாய்

காதலின் திரைச்சீலையை
Costly செருப்பு
வாங்கிய Bill கிழிக்கும்

ஹார்மோன்கள்
எரிமலைபோல்
சீற்றம் கொள்ளும்
உதடுகள் மட்டும்
காஷ்மீராகும்

தாகங்கள்
Mineral Water-ராகும்

பிறகு
எச்சில் சொட்டில்
Mineral Water அடங்கும்

காதலித்துப்பார்

Speed Break -ல்
ஏறி ஏறியே இடுப்பு
உடைந்துபோக
உன்னால் முடியுமா?

Ice Cream வாங்கிக்கொடுக்கும்
இம்சையை அடைந்ததுண்டா

ஓடாத படத்தை
ஓடவைத்த திருப்தி
அடைந்ததுண்டா?

skype -குள்ளே
உன் முகத்தை
விதைக்கத் தெரியுமா?

Empty Message -ஐ இனிமையாகவும்
இனிமையான Message -ஐ Empty ஆகவும்
உன்னால் படிக்க முடியுமா?

ATM Card
Empty ஆக வேண்டுமா?

ஐந்தங்குல இடைவெளியில்
Pop Corn Pocket இருந்தும்
Online-ல் தலப்பாக்கட்டு பிரியாணி
Order செய்ததுண்டா

காதலித்துப்பார்

சின்னச் சின்ன
Selfie-யில்
சிலிர்க்க முடியுமே

அதற்காகவேனும்

Whats App -ஐ வருத்திப்
புதுப்பிக்க முடியுமே

அதற்காகவேனும்

Incoming Call -க்கும்
Outgoing Call -க்கும்
இடையேயுள்ள
வித்தியாசங்கள் விளங்குமே

அதற்காகவேனும்

Cellphone -ஐ Switch Off
செய்துவிட்டு பேசவும் முடியுமே
பேசிக்கொண்டிருக்கும்போதே
Switch Off ஆகவும் செய்யுமே

அதற்காகவேனும்

காதலித்துப்பார்

Cellphone-க்கு
EMI கட்ட நேரிட்டாலும்
Internet Bill-ல்
இடிவந்து விழுந்தாலும்

விழித்துப்பார்க்கையில்
உன் வீட்டுக்கதவை
கடன்காரன் கழற்றிச்
சென்றாலும்
ஒரே கையெழுத்தில்
உன் பூர்வீக சொத்து
விற்கப்பட்டாலும்

நீ நேசிக்காத
அவளோ அவனோ ஒருவேளை
உன்னை நேசித்துவிட்டால்

காதலித்துப்பார்

முகத்தில் ஆசிட் அடிப்பதோ
உதட்டில் Lipstic அடிப்பதோ
இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்

காதலித்துப்பார்
********************************************************************************************************************
து(ப)ணிவுடன்,
-திருமூர்த்தி

********************************************************************************************************************
காதலர்கள் காலம் கரையக் கரைய சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றம் அடைந்து வருகின்றனர்.ஆனால் காதல் மட்டும் அதே இடத்தில் நின்றுகொள்கிறது என்று தோன்றுகிறது.காதல் என்னும் காற்றை சுவாசிக்கிற வேகத்தில் கொளுத்தி விடுகின்றனர்.சமூகம் காதலை இடம்,பொருள்,பாரம்பரியம்,பண்பாடு என பல்வேறு கோணங்களில் பார்க்கலாம்...ஆனால்,அது காதலர்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகவே உள்ளது..

வைரமுத்து-வின் காதலித்துப்பார்(1989) நிஜக்காதலை வெளிக்காட்டுகிறது என்றால்,என்னுடைய காதலித்துப்பார்(2015 டிசம்பர்)இந்தக்கவிதையும் நிஜக்காதலை தோலுரித்துக் காட்டுகிறது என்று சொல்வதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு..ஒரு வருத்தம்,கவிதையை முழுவதும் தமிழில் எழுதமுடியவில்லையே என்று..ஆனால்,இந்தக்கவிதையை டமிலில் சேர்த்துகொள்ளலாம் அல்லவா?என் அன்பு எழுத்து நண்பர்களே..! நான் காதலர்களை விமர்சனம் செய்துவிட்டேன்..!முடிந்தால் நீங்கள் என்னுடைய....என்னுடைய...என்னுடைய...இந்தக்கவிதை மீது விமர்சனத்தை கொளுத்துங்கள்..

எழுதியவர் : திருமூர்த்தி (11-Nov-15, 9:58 am)
பார்வை : 686

மேலே