இதயமே நீ துயில் எழு

இதயமே நீ துயில் எழு!
உதயமே நீ வழி விடு!

ஒரு வானம்பாடி இசைக்கிறது
சிறகுகளை அது அடிக்கிறது
தூங்காதே, நீ தூங்காதே
என் இதயமே!

ஊதாப்பூ ஒன்று விரிகிறது
நாதம் கேட்டு எழுகிறது
எழுப்பிடும் வாசத்தை
கடவுளைத் தேடி
காணாமலே அது உயர்த்துதே

வாழும் பூக்கள் உறங்கின
காணக் கண்களைத் திறந்தன
கிண்ணத்தில் பனித் துளி
தன்னை அன்றைய
கண்ணாடி முத்தெனத் தந்தன!

தூய நல்ல காற்றிலே
வான தூதரும் கடக்கிறார்
வாயைத் திறந்திருக்கும்
பூக்களின் மேல் புது
வண்ணத்தை ஆசீராய் தெளிக்கிறார்

இதயமே நீ துயில் எழு
உதயமே நீ வழி விடு

எழுதியவர் : தா. ஜோ. ஜுலியஸ் (11-Nov-15, 1:42 pm)
பார்வை : 226

மேலே