காதல் தோல்வி

பழகிய காலங்கள் - என்
இமைகளின் ஓரங்கள்
நினைவதன் கீறல்கள்
மெல்லத் ததும்புது ஈரங்கள்

அனைத்தையும் சொல்லிட
ஆண்மை தடுக்குது
சில்லென சாரல்கள்
மெல்ல நெருடுது


பாவை ஆவள்
பார்வை பட்டதும் - பாறை
பூவென நாணுது
மொட்டவிழ்ந்து அரும்பு
சட்டென மலராய் மாறுது


கொட்டும் பணியில்
வெட்டும் திமிர் காட்டி
பட்டுப் பூ -அவள்
எட்டிச் செல்கையில்
திட்டென ஆசைகள்
முட்டி முளைக்குது


பாதைகள் மருகினில் - அவள்
பாதங்கள் சென்றதாய்
பூவைகள் சிதறி - வேதம்
சொல்லிக் காதல் தூண்டுது

தன்னலம் இழக்கிற
தைரியம் - அவள்
பின்னாலே செல்கிற
இதயம் -கைகோர்த்து
களவாடுதென் கனவுகளை

பத்து வயதில் பார்த்தவள்
பாவாடை தாவணியில்
பூத்திருந்தாள்-மொத்த
நாணமும் திரட்டி -அவள்
ஓரச் சிரிப்பில்
முடிந்திருந்தாள்


விலங்கான விழி
விலகாமல் மாட்டிக்கொண்டேன்
நெருங்கிச் செல்கையில்
நொறுங்கிப் போகிறேன்
நிழல் நடுங்கி வெயில் பனியாய்
உருகும் நிலை உணர்கிறேன்


இத்தனை வருட
என் காதலை
கொத்தென அள்ளி
ஒற்றை வார்த்தையில்
சொல்வதாய்
எத்தனை முறை
முயன்றேன்
அத்தனை முறையும்
தோற்றேன்.....


சஹானா ஜிப்ரி
வாங்காமம்

எழுதியவர் : சஹானா ஜிப்ரி (11-Nov-15, 1:34 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 459

மேலே