சுதந்திர தேசம்
மனமது துயிலையில்
மயிலது எழுப்புது
இனமது முறைக்கையில்
இறகுகள் முளைக்குது
களமது அமைந்திட
கவிதைகள் பிறக்குது
ஜலம் ஜலம் ஜலமது
மனதினில் பரவுது
சுதந்திரம் எண்ணயில்
சுகமது உதிக்குது
சுகம்தர சுகம்தந்த
சுந்தரை மதிக்குது
கறைகளை களைந்த அவர்
பெயர்களை மறந்து
அரசியல் நடத்தும் அந்த
உருப்படி கனைக்குது
சிலர்விழ பலர்எழ
திரும்பிய திசைஎல்லாம்
கட்சிகள் முளைத்துமக்கள்
மனம்தனை குழப்புது
அதைசெய்தார் இதைசெய்தார்
அடுத்தோரை குறைசொன்னார்
ஊழல் எனும் பெயரை
தேசியம் ஆக்கினார்
தேர்தலுக்கு முன்னேவந்து
பிச்சைக்காரன் போல நிற்பார்
தேர்தலது முடிந்துவிட்டால்
தேனிபோல பறந்திடுவார்
கட்சிவிட்டு கட்சிதாவி
குரங்காட்டம் ஆடிடுவார்
கட்சிக்குள்ளே கத்திகத்தி
மக்கள்தனை மறந்திடுவார்
அங்கொன்றும் இங்கொன்றும்
ஓரிருவர் நன்மை செய்தால்
முன்னொன்றும் பின்னொன்றும்
சொல்லி வீட்டுக்கே அனுப்பிடுவார்
சுதந்திரத்தை பெற்றுவிட்டு
சுதந்திரத்தால் கஷ்டப்பட்டால்
சுதந்திரத்தை சுமந்துதந்த
சுந்தரர்க்கு என்ன பதில்?
மதயானை குணமுமுண்டு!
மதத்தாலே பிணக்கமுண்டு!
கததூர ஓட்டத்திலே
எத்தனையோ கலகமுண்டு!
படிப்படியா படிப்படியா
மெல்ல மெல்ல உயர்ந்தாலும்
பரமப(ம)த பாம்பினாலே
படீரென்ற சறுக்கலுண்டு!
கொஞ்சகால வாழ்க்கையிலே
பஞ்சமில்லா வஞ்சனைகள்
கஞ்சிசோறைத் தின்னாலும்
நிறைய வேணும் அன்பணைகள்
பால் போன்ற வெள்ளைமனம்
பச்சைப்பிள்ளை போன்ற குணம்
கேள்விப்பட்டா இந்தியான்னு
ஆஹான்னு கொஞ்சவேணும்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
நினைத்ததனால் நல்லபயன்!
சுதந்திரத்தால் நேர்மை நிலைச்சா
தேசத்திற்கே என்றும் சுபம்!