மானும் மயிலும்
மானது நடனம் புரிகிறது
-----மயிலது மயங்கி சேர்கிறது
தேனதை இதயத்தில் தெளிக்கிறது
-----தேகத்தில் நளினம் தெரிகிறது
ஊனதில் உணர்ச்சிப் பெருக்கெடுத்து
-----உல்லாசம் தேடிட நினைக்கிறது
கானதில் உலவிடும் மயிலொன்று
-----கன்னியைத் தீண்ட நினைக்கிறது
ஆடல் கலையில் அனைவருக்கும்
-----ஆனந்தம் எப்போதும் கிடைக்கிறது
ஊடல் வந்ததும் காதலரின்
-----உள்ளங்கள் நெருங்கி சேர்கிறது
கூடல் என்பது உள்ளவரை
-----குவளையம் என்றும் அழியாது
தேடல் இல்லா வாழ்க்கையிலே
-----தேவைகள் என்றும் தீராது
கலையில் பற்பல வகையுண்டு
-----கானில் ஆடிடும் மயிலுண்டு
வலையில் சிக்கிடும் மீனுண்டு
-----வஞ்சியர் வார்த்தையில் தேனுண்டு
சிலையில் அற்புத அழகுண்டு
-----சிந்தித்து வாழ்ந்தால் உயர்வுண்டு
நிலையில் மாற்றம் வேண்டுமேன்று
-----நித்தமும் உழைத்தால் வெற்றியுண்டு.
எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்