வலியின் வாரிசு

ஒரு சில வண்ணங்களுக்கிடையில்
கலைந்து கிடக்கிற என் மனசு
நான்கு சட்டங்களுகிடையில்
அடைக்கப்பட்ட கிறுக்கலென

பிண வாடை வீசும்
பற்க்களின் அடுத்த
வேளைக்கான - மாமிசத்தின்
உயிர்த் துடிப்புடன்
அடங்குகிற ஜீவன்

எரிந்தணைந்த
சோகத்தின் - எச்சமென
வானில் படிந்த
மேகத்தின் மென்மையென
தேகம் - தன்
சோகத்தை - மழையாய்
அழுகிறது

அழுத நீரின் ஆதாரத்தில்
தரை முட்டி
தலையெடுக்கிறது
விதைக்குள் அடங்கிய
விருட்சம்

எழுதியவர் : சஹானா ஜிப்ரி (12-Nov-15, 10:30 pm)
Tanglish : valiyin varisu
பார்வை : 79

மேலே