புயல் சீற்றம் கட்டுரை

*
இயற்கையின் பணிகள் என்னவென்று எவருக்கும் எதுவும் தெரியாது? அவை நியதியோடு செயல் புரிவது எப்படி என்று எதுவும் தெரியாது? ஐம்பூதங்களின் நற்பணிகள் உயிர்வாழ்வதற்கான ஆதார சக்திகளாகத் திகழ்கின்றன. அவைகளின் செயல்பாட்டடில் கூட மௌனமும், சீற்றமும் கூட உள்ளடங்கியிருக்கின்றன. ,வெப்பம், மழை, குளிர் புயல் பூகம்பம் என அந்தந்தக் காலங்களில் தாங்கமுடியாத அழுத்தங்களிளால் அவைகள் வெளிப்படுத்தி விடுகின்னறன. அதுவே வெயில், குளிர், புயல், பூகம்பம் என்று பருவம்தோறும் தன்னை வெளிப்படுத்தி ஆசுவாசப்படுத்திக் கொள்கி்ன்றன. ,இயக்கச் செயல்பாடுகளைப் புதுபப்பித்துக் கொள்கின்றன. இவற்றினால் பாதிக்கப்படும் கோடானகோடி மக்கள் பாதிக்கப்படும்போது வாழ்வின் நிலைப்பாடுகள் நிலைக்குலைந்துப் போய்விடுகின்றன. அதனால் தாங்கமுடியாதத் துயரமும் துன்பமும் வாட்டிவைக்கின்றன. இந்நிலையிலிருந்து அவர்கள் மீள்வதற்கு எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளும் என்றும் சொல்வதற்கில்லை.ஆயினும், இச்சமுதாயம் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் அதனை வேடிக்கைப் பார்க்கின்ற தன்மையிலேயே ஆட்சியதிகாரங்கள் இருக்கின்றன. பாரபட்சமான செயல்திட்டங்களைக் கொண்டு மக்களுக்காகச் சேவைகளையாற்றி விளம்பரப்படுத்திக் கொண்டு பணியாற்றி வருகின்ற போக்கே மிகுதியாகத் தென்படுகின்றன. இதனால் மக்களுக்கு என்ன ஆறுதல் நிவாரணம் கிடைத்துவிடுகின்றன. எல்லாமே கேள்விக்குறியாகவே இருக்கின்றன. இயற்கையின் சீற்றத்தை விட அதிகாரவர்க்கத்தின் நிர்வாகச் சீற்றமே மக்களின் மீது வேகப்பாய்ச்சலாகி தடுமாற வைக்கின்றன. .மேலும் அவர்களை நிர்கதிக்கு ஆளாக்கி வதைக்கின்றன என்றே சொல்லலாம். எத்தனையோ காலமாக வந்து வந்து புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்ற இந்தப் புயல்மழைலிருந்து நாமும் நம் அரசு நிர்வாகமும் கற்றுக் கொண்ட பாடம் தான் என்ன?
ந.க.துறைவன்.

எழுதியவர் : ந.க.துறைவன் (13-Nov-15, 10:41 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 575

மேலே