மகிழ்ச்சியின் முயற்சி

இயலாமையினால் முயற்சிக்கவில்லை
என்று உனக்குள் கூறிக்கொண்டு
உன்னை நீ ஏமாற்றுகிறாய்

முயற்சி செய்தால் தான்
வெற்றியோ தோல்வியோ கிட்டும்
முயற்சித்து முடிவறியாமல்
மூடனாய் சுற்றுகிறதேன்

வெற்றி மட்டும் தான்
மகிழ்ச்சி என்று எண்ணினால்
முயற்சி செய்ய மனது வராது
முயற்சி செய்யாமல்
மகிழ்ச்சி காண கூடுமோ

முயற்சி செய்
வெற்றி கிடைக்கும்
வெற்றி அடைந்தால்
மகிழ்ச்சி கிடைக்கும்
தோல்வி அடைந்தால்
பிறர் மகிழ
வாய்ப்பு கொடுத்த
திருப்தி கிடைக்கும்

உண்மையான மகிழ்ச்சி என்பது
நீ அடையும் வெற்றியில் அல்ல
உன் வெற்றி வாய்ப்பை
ஒருவன் தன் திறமையால் பற்றிக்கொண்டு போகும்போது
நீ உன் மனதில்
"போனால் போகட்டும் போடா" ;-)
என்று உன்னை தேற்றி கொள்வதே
உண்மையான மகிழ்ச்சி

இதை உணர்ந்தால்
நீ எந்த தருணத்திலும்
மகிழ்ந்திருப்பாய்

எழுதியவர் : jonesponseelan (13-Nov-15, 3:14 pm)
பார்வை : 227

மேலே