காதலை ஏற்றாள்

கண்ணே கண்ணில் அடுப்பை மூட்டி
என்னை தீயில் வாட்ட – எரியும்
தேகம் உருகும் குருதி வழியும்
மையாய் வரையும் கவிதை

கவிதை காட்டி காதல் சொல்ல
பூவிடையாள் உன்னை நோக்கி – புவி
சுற்றுவதை போலே நானும் சுற்றி
சுற்றி உடல் இளைத்தேன்

வீரம் இழந்து உரம் அற்று
ஓரம் சென்று ஒடுங்கினேன் – கோழை
எனக்கு காதல் எதுக்கு என்று
மனம் வெந்து போனேன்

உரம் ஏற்றி வீரனை போல்
சர வெடியாய் வந்தேன் – பிறையே
உன் கண் பார்வை கடும்
குளிரில் ஈரமாகி போனேன்

பாவம் இந்த மடையன் என்று
பரி தாபம் கொண்டு - சரி
போனால் போகட்டும் என்று என்
காதலை ஏற்றாள் செண்டு......

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (13-Nov-15, 7:03 pm)
பார்வை : 103

மேலே