எந்த நிமிடம்

உன்னை பார்த்தால்
உலகம் புதிதாய் தோன்றும் .
உனது பார்வை
புதிராய் தோன்றும் .
உன் பெயராய் நான் மாறும் தருணம்
உன்னாலே உதடுகளில் சிறு மரணம்
உயிர் அலைகளின் உணர்வுகள்
உன் தோள் சேரும் நிமிடங்கள்.
காதல் குறிபேட்டில்
கவிதை குறிபாகிறேன்
அந்த வருடலினால்
என்னக்குள் பாயும்
லட்சம் நதி.
யுக யுகமாய் தொடரட்டுமே
நம் காதல் பயணம்.
என் கண்களில்
காதலையும் நாணத்தையும்
உணர்ந்தவனே
எந்த நிமிடம்
காதல் பூத்ததோ
இன்னும் அறியேன்!